Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாத்திகனுக்கும் கடவுள் தேவை 1008 பிரதட்சணம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அன்பு என்பதே தெய்வமானது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2014
05:01

* உலகம் தன்னை மதிக்க வேண்டும் என்பதற்காக, சேவையில் ஈடுபடக் கூடாது. மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் சேவை செய்ய வேண்டும்.
* உலக வாழ்வை வெறுத்து ஒதுக்கத் தேவையில்லை. வெறுப்பு கொண்டவனுக்கு உலகில் எந்த இன்பமும் கிடைக்கப் போவதில்லை.
* மண்ணில் தோன்றிய பெரியோர்களுக்கும், அவர்கள் போதித்த அறிவுரைக்கும் அளவே கிடையாது. ஆனால், நாகரிக உலகில் மனிதன் அவற்றை புறக்கணிக்கிறான்.
* நாம் அனைவரும் சகோதரர் என்ற நல்லுணர்வை மனிதசமூகம் பெற்றுவிட்டால், காவல் நிலையம், நீதிமன்றம், அரசாட்சி போன்ற அமைப்புகள் தேவைப்படாது.
* மனிதனுக்கு மட்டுமே ஆறறிவு உண்டு. ஆறாவது அறிவான பகுத்தறிவே, மற்ற உயிர்களில் இருந்து மனிதனைப் பிரித்துக் காட்டுகிறது.
* யார் வேண்டுமானாலும் பொருளைத் தேடி விடலாம். ஆனால், அருட்செல்வத்தை அனைவராலும் தேட முடியாது.
* வாழ்வில் ஆண் ஒரு பாதி என்றால், பெண் மறுபாதியாக இருக்கிறாள். இரண்டும் சேர்ந்தால் தான் முழுமைத் தன்மை பெற முடியும்.
* எல்லா உயிர்களையும் தன்னைப் போல கருதி அன்பு காட்டி வாழ்வதே, இல்லற வாழ்வின் அடிப்படை பண்பு.
* அன்பு வாழும் உள்ளமே தெய்வம் வாழ்வதாகும். அதுவே நிறைவானதும், இன்பமானதும் ஆகும். அன்புச் செல்வத்தின் முன் மற்ற செல்வங்கள் தோற்றுவிடும்.
* இந்த மனித உடல், அழகு தெய்வம் வாழும் இயற்கைக் கோயில். அதைப் பாதுகாப்பது நம் கடமை.
* ஒழுக்கம் உயிரை விடமேலானது. அதுவே மனிதனுக்கு சிறப்பு அனைத்தும் தருகிறது. நல்லொழுக்கம் கொண்டவனின் அழகு அனைவரின் மனதையும் கவர்ந்து விடும்.
* ஒரு மனிதனையும், அவன் சார்ந்த சமுதாயத்தையும், நாட்டையும் உயர்த்துவது ஒழுக்கமே.
*வாழ்வில் ஒழுங்கு இருக்க வேண்டும் என்பது உண்மையானால், தற்கால மேல்நாட்டு நாகரிக மோகத்தை விட்டு விடுவது அவசியம்.
* கல்வியின் உண்மையான பயன் ஒழுக்கநெறியில் நடப்பது தான். ஒழுக்கமில்லாத கல்வியால் யாருக்கும் பயன் உண்டாகாது.
* ஒழுக்கத்தை உயிராகப் போற்றுங்கள். நம்மைக் கரைசேர்க்கும் பலம் ஒழுக்கத்திற்கு மட்டுமே உண்டு. எக்காரணம் கொண்டும் ஒழுக்கத்தை கைவிட்டு விடாதீர்கள்.
* அடிக்கடி கவலைப்படுவது கொடிய வியாதி. அது உடல்நலனைக் கெடுத்து விடும்.
* பிறப்பால் உயர்வு, தாழ்வுகருதுவது கூடாது. ஒழுக்கமே மனிதனின் உயர்வு, தாழ்வுக்கு காரணம்.
* அச்சமுள்ள இடத்தில் வீரம் இருப்பதில்லை. அச்சம் அற்றவனே உண்மையான வீரன்.
* அன்பு, இரக்கம், கருணை, ஈகை போன்ற மேலான குணங்கள் இல்லாவிட்டால், உலகத்தில் பாவச்சுமை பெருகி விடும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar