கார்த்திகை மாதம் புனிதமான மாதமாகும். இம்மாதத்தில் அருகிலுள்ள நரசிம்மர்கோயிலுக்குச் செல்வது சிறப்பு. அதிலும் விசேஷம், 1008 பிரதட்சணம். நரசிம்மரையோ, ஆஞ்சநேயரையோ இந்த மாதத்தில் 1008 முறை பிரதட்சணம் செய்வது மிகமிக நல்லது. ஒரே நாளில் செய்ய வேண்டும் என்று இல்லை. மாதம் முழுவதும் எடுத்துக்கொண்டு செய்யலாம். 1008 பிரதட்சணம் முடிந்தவுடன் பானக நைவேத்யம் செய்து அர்ச்சனை செய்து முடிக்கலாம்.