Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முசிறியில் சொக்கநாதர்- மீனாட்சி ... விவேகானந்த ஜெயந்தி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அகத்திய மாமுனிவர் ஞானம் – முப்பது (பகுதி8)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2014
11:01

அறிமுகவுரை: சென்ற பாடலில் மனதினை கட்ட வேண்டிய அவசியத்தை கூறியவர் இந்தப் பாடலின் மனதின் வரைவிலக்கணத்தினை கூறுகிறார், மனம் எப்படி விரிகின்றது, மனதின் தன்மைகள் என்ன? மனதிற்கும் பிரபஞ்சத்திற்கும் என்ன தொடர்பு? பஞ்ச பூதங்களுக்கும் மனதிற்கும் என்ன தொடர்பு? எண்ணங்கள் உதிக்குமிடமும் ஒடுங்க்குமிடமும் மனம் என்பது பற்றி கூறி சத்குருவிடம் ஞானம் பயில ஒரு சாதகன் மனம் பற்றி எவற்றையெல்லாம் அறிந்திருக்கவேண்டும் என்பதன் முழுமையான பட்டியலை இந்தப் பாடலில் கொடுக்கிறார், இந்த ஒரு பாட்டின் பொருளே மனம் பற்றி அறிந்து கொள்ள போதுமானது. இந்த பாடலில் உள்ள அனைத்து விடயங்களினதும் பொருளை அறிந்தவன் தனது மனதின் முழுமையான அமைப்பினையும் செயற்பாட்டினையும் அறிந்தவனாவான்.

இனி பாடல் வருமாறு;

மனந்தானே புத்தியாங் காரஞ்சித்தம்
மதியிரவி யண்டபிண்ட மானவாறும்
மனந்தானே சக்திசிவ மாய்கை ஞானம்
வாசிபார் தேசிபர பிரம்மம்யாவும்
மனந்தானே நாதவிந்து அரூபரூபம்
வளிகனல் விண்புனல் பண்புனல்மண்ணானவாறும்
மனந்தானேவுதிக்குமிட மொடுங்குமிடமிரண்டும்
வகைசொல்லுஞ் சற்குருவை வணங்கிக்கேளே   7


இனி பாடலின் பொருளுரைக்கு செல்வோம்.

பொருளுரை: மனந்தானே புத்தியாங் காரஞ்சித்தம்: மனமே புத்தி, அகங்காரம், சித்தம் என விரிகிறது என்கிறார் குருதேவர், மனம், சித்தம், புத்தி, அஹம்காரம் என்ற நான் கும் சேர்ந்து அந்தக்கரணம் எனப்படும். எம்மை சூழவுள்ள பௌதீக உலகத்தினை அறிய புறக்கரணங்க்களாகிய ஐம்புலங்கள் இருப்பது போல் சூஷ்ம புலங்களை அறிய உள்ள அமைப்புத்தான் இந்த அந்தக்கரணங்கள். இவற்றையே சூஷ்ம உடல் எனக் கூறுகிறோம். மனம் என நாம் பொதுப்படக் கூறினாலும் அது தனது செயற்பாட்டிற்கேற்ப நான்கு உட்பிரிவுகளை கொண்டது. ஆக மனம் என்ற ஒன்றிலிருந்தே இந்த நான் கும் உருப்பெறுகிறது. இது ஒவ்வொன்றைப்பற்றியும் சிறு அறிமுகத்தினை விளக்கவுரையில் பார்ப்போம்.

மதியிரவி யண்டபிண்ட மானவாறும்: மனமே மதியாகிய சந்திரனையும் இரவியாகிய சூரியனையும் அண்டத்திலும், பிண்டத்திலும் உருவாக்குகிறது, இது எப்படி? அண்டத்திலுள்ளது பிண்டத்திலுண்டு என்பது சித்தர் வாக்கு! அண்டத்திலுள்ள சூரிய சந்திரர் அனைத்தையும் உருவாக்குவது பிரபஞ்ச மனம் எனும் இறைவனின் மனச்சக்தி, பிண்டத்திலுள்ள் சந்திரமண்டலத்தினையும் சூரிய மண்டலத்தினையும் உருவாக்குவதும் அதன் கூறாகிய மனமே எனபது இதன் பொருள், அதாவது அண்டத்தினையும் பிண்டத்தினையும் இணைப்பது மனமே என்று அறிதல் வேண்டும்.

மனந்தானே சக்திசிவ மாய்கை ஞானம்: மனமே சக்தி, அந்த சக்தியினை மாயை சூழ அஞ்ஞானம், இந்த நிலையில் ஆன்மா நானே சிவம் என்ற நினைப்பு மறந்து புலன்வழி செல்கிறது, இதற்கு காரணம் மனதினை சூழ்ந்த மாயை, அந்த மாயை நீங்கில் சிவம் விளங்கும். இதனை விரிவாக விளங்கி கொள்ளவே சித்தாந்தம் பார் என மேற்பாட்டில் கூறிவைத்தார். பதியாகிய சிவத்தின் இயக்க சக்தியே சக்தி, இதையே அம்பாள் என உபாசிக்கின்றனர். மனம் என்பது ஆன்மாவிற்கு அறிவினைக் கொடுக்கும் ஒரு அந்தக்கரணம், அந்த மனதினை மாயையாகிய சக்தி ஆட்கொள்ள ஆன்மா சிவமாகிய உண்மை சொருபத்தினை மறந்து விடுகிறது. அதனால் மனதினை அறிய, மாயையினை கட்டுப்படுத்தும் சக்தி வேண்டும், இந்த சக்தி பெற சக்தி உபாசனை தேவை, அதன் மூலம் சக்தியின் அருளை பெற்றவனே ஞானத்தினை அடைகிறான், அடைந்த ஞானத்தின் மூலம் ஆன்மா, மனத்தின் மூலம் வெளிபுலன்களால் மாயையில் சிக்கியிருந்ததிலிருந்து மீண்டு ஞானத்தினால் உள் நோக்கி பயணித்து சிவத்தினை அடைகிறது.

வாசிபார் தேசிபர பிரம்மம்யாவும்: மேற்கூறிய நிலையை அடைய வாசியாகிய பிராணனைப் பார் என்கிறார். பிராணன் ஒழுங்குபெற மனசலனமடங்கும் என்பது யோக இரகசியம், மனமும் பிராணனும் இரட்டைகள், மனதினை அடக்க பிராணனின் ஓட்டத்தினை சீராக்க வேண்டும், பிராணனை கட்டுப்படுத்த மூச்சினை கவனிக்க வேண்டும் இவ்வாறு செய்ய மனமடங்கி பரபிரம்மமாகிய சிவத்தினை அறியும் தன்மை உண்டாகும்.

மனந்தானே நாதவிந்து அரூபரூபம்: நாதமும் விந்துவுமே மனம் இறையை அறியக்கூடிய அதிசூக்கும நிலை, நாதமும் விந்துவும் கலந்து உருவானது இந்த பிரபஞ்சம், இதன் குறியீடே பிரணவம், "ஓம்", ஓம் எனும் பிரணவம் அகர, உகர, மகாரம் ஆகிய மூன்றெழுத்து சேர்ந்தது, அகரம் சிவனை குறிக்கும், உகரம் சக்தியை குறிக்கும், ம் இரண்டும் கலந்து வந்த சீவனைக் குறிக்கும். இந்த ஓம் எனும் பிரணவமே மனம் அறியக் கூடிய இறைவனிம் அதிசூக்கும நிலை. இந்த நாதமே ஒருவரின் சாதனையின் இறுதினிலையில் அறியக் கூடிய நிலையாகும். மனமே இந்த அதிசூக்கும நிலையினை அறிவிக்கும் சாதனம், மனம் மூலமே இறையின் அடிசூக்கும நிலையினை அறிய முடியும். இதே மனம் தான் அரூபதினையும் ரூபத்தினையும் பிரித்தறிகிறது, மனமே புலன்களின் மூலம் அறியும் கருவி. .

வளிகனல் விண்புனல் பண்புனல்மண்ணானவாறும்: இது மனதிற்கும் பஞ்சபூதங்களுக்கும் இடையிலான தொடர்பினை குறிக்கும் வரி, மனமே பஞ்ச பூதங்களினை தோற்றுவிக்கிறது, அவற்றை பிரிக்கின்றது, சேர்க்கின்றது, இது சக்தியாகிய இறைமனத்தினால் நிகழ, மனித மனம் சாதனையினால் அந்த ஆற்றலைப் பெறமுடியும் எனக்காட்டப்படுகிறது. அதாவது சக்தியாகிய பிரபஞ்ச மனதில் மனித மனம் கலக்க பஞ்ச பூதங்க்களையும் சேர்த்து பிரிக்கும் ஆற்றலை மனம் பெறும். வளி - காற்று, கனல் - நெருப்பு, விண் - ஆகாயம், புனல் - நீர், மண் - நிலம் ஆகிய பஞ்சபூதங்களும் பண்புனல் என்றால் பிரிந்து கலந்த எனும் பொருள் கொள்ளலாம், அதாவது இந்த பஞ்ச பூதங்களினை பிரிப்பது, சேர்ப்பதுமான வேலையினைச் செய்வது மனமே என்பதனைக் குறிக்கும் சொல்லாக பண்புனல் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

மனந்தானேவுதிக்குமிட மொடுங்குமிடமிரண்டும்: மனமே இந்த பிரபஞ்சமாகிய வெளியுலகம், எண்ணங்கள் உதிக்கும் இடமும், ஒடுங்கும் இடமும். மனம் ஒன்ற ஒன்று இல்லையானால் தோற்றமும் இல்லை, அழிவும் இல்லை, இந்த உலகத்தின் அனுபவமும் இல்லை. மனிதன் என்ற வார்த்தை மனம் உள்ளவன் என்ற பொருளிலேயே கூறப்பட்டது, எந்த மொழியின் மனிதன் என்ற பெயரை எடுத்து நோக்கினாலும் மனம் என்ற சொல்லுடன் தொடர்பு பட்டதாகவே இருக்கும்.

வகைசொல்லுஞ் சற்குருவை வணங்கிக்கேளே: இந்த இறுதி வரியில் அன்பானவனே மனதைப்பற்றி நீ அறியவேண்டிய எல்லாவற்றினையும் சுருக்கமாக உனது ஞாபகத்திற்காக இந்த பாடலில் கூறிவிட்டேன். இவை ஒவ்வொன்றும் எப்படி என்பதனை அறிய உன்னுடைய சத்குருவை பணிவுடன் அணுகி, இவற்றை கற்கவேண்டும் என்ற உண்மையான விருப்பத்துடன் அதற்கான தகுதிகளை வளர்த்துக்கொண்டு கேள் என முடிக்கிறார்.

சித்த வித்யா விளக்கவுரை: ஒரு சாதகன் தனது சாதனையில் முழுமையாக அறிய வேண்டிய விடயம் அவனது மனம் என்ற கருவியும் அதன் உப அமைப்புகளும், மனம் என நாம் கூறும் அமைப்பிற்குள் அந்தக்கரணங்கள் என்ற நான்காக மனம், சித்தம், புத்தி, அகங்காரம் பிரிகின்றது. இந்த அமைப்பினுள் மனம் எனக் குறிக்கப்படுவது முன்மனம் எனப்படும் ஆய்வு மனத்தினை, சித்தம் என்பது நினைவுகளில் சேமிப்பிடமான ஆழ் மனத்தினை, மேற்குறித்த இரண்டு மனத்திலும் ஏற்படும் பதிவுகளை பகுத்து ஆராயும் பகுதி புத்தி எனப்படும். இதே மனத்தின் இன்னொரு பகுதி தமோ, ரஜோ, சத்துவ குணங்களுடன் தனனை இணைத்துக்கொண்டு "நான்" எனும் அகங்காரத்தினை ஏற்படுத்திக்கொள்கிறது. இப்படி ஒருமனிதனின் சூட்சும உடலின் இந்த நான்கு பாகங்கள் பற்றியும் தெளிவாக அறிதல் சாதனையில் முக்கியமான ஒரு பகுதி.

அடுத்த விடயம் பிரபஞ்சத்திற்கும் மனிதனிற்கும் இடையிலான தொடர்பு மனத்தினூடாகவே இயங்குகின்றது என்ற உண்மை. இதன் அடிப்படை தான் ஜோதிடம்.

பின்பு மாயை பற்றி அறிதல் பற்றியும் அந்த மாயையினை வென்று ஞானத்தினூடாக சிவத்தினை அறிதல் வேண்டும் என்பதும் கூறப்படுகிறது. மனதில் மாயை நீங்க மனச்சலனம் அடங்க வேண்டும், அதற்கு வாசியான பிராணனை கட்டுப்படுத்த தெரியவேண்டும் என்பது விளக்கப்பட்டுள்ளது.

மனத்தினூடாகத்தான் இறை அனுபவத்தினை பெறுகிறோம் என்பதும், பஞ்சபூதங்களது கலப்பும் மனதினூடாகத்தான் நிகழ்கின்றது என்பதனையும் சுருக்கமாக விளக்கி, இந்த பிரபஞ்ச்சத்தின், எண்ணங்க்களின் தோற்றமும் ஒடுக்கமும் நிகழும் இடம் மனமே என்பதனையும் விளக்கி இறுதியாக இந்த பாடல் இவற்றை சுருக்கமாக சொல்கிறது விரிவாக அறிய குருவைக்கேள் என முடிக்கிறார்.

ஆக இந்தப் பாடல்கள் ஒரு சாதகன் சரியான வழியில் செல்வதற்கும், குருவிடம் வித்தை கற்றுக்கொள்ளும் போது எவற்றை அறிந்து கொள்ள வேண்டுமென்ற தகவல்களையும் கொடுக்கும் ஒரு உசாத்துணை என்றால் மிகையாகாது!

ஸத் குரு பாதம் போற்றி!

நன்றி: சுமனன் – சித்த வித்யா விஞ்ஞானம்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; காவிரி தென்கரையில் உள்ள தளங்களில் 26-வது தலமாக ஆதிகும்பேஸ்வர சாமி கோவில் உள்ளது. உலகம் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு உற்ஸவத்தை முன்னிட்டு மலைமீதுள்ள நுாபுர ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் கைசிகதுவாதசியை முன்னிட்டு ஏழுமலையான் கருவறையில் இருக்கும் உக்கிர ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் இன்று நவ.3ம் தேதி மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் விளாச்சேரியில், தென் திருப்பதி என போற்றப்படும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar