பெரம்பலூர்: பெரம்பலூரில் உள்ள மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி திருக்கோவிலில், 2 கோடி ரூபாய் செலவில் திருப்பணி புதிதாக அமைக்கப்பட்டு கடந்த ஆண்டு ஜன., 23ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக முதலாமாண்டு கும்பாபிசேக நிறைவு விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு காலை யாகசாலை பூஜைகளும், பெருமாளுக்கு திருமஞ்சனமும், மதியம் உச்சிகாலத்தில் மகா தீபஆராதனையும் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வன், அரியலூர் உதவி ஆணையர் கோதண்டராமன், கோவில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், தர்மபரிபாலன சங்க துணை தலைவர் ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர். இரவு சுவாமி வெள்ளி கருடவாகனத்தில் திருவீதி உலா, மூலவருக்கு ஸ்ரீவெங்கடாஜலபதி அலங்காரமும், கம்பம் ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அலங்காரமும் சிறப்பு பூஜைகளும் நடந்தது.