கமுதி: கமுதி கோயில்களில் பிரதோஷ விழா நேற்று நடைபெற்றது. மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் பல்வேறு அபிசேகங்களுடன் சிறப்பு அலங்காரம், தீபராதனை நடைபெற்றது. கண்ணார்பட்டி கணபதியானந்தர் சைவ மடம் சிவாலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தென்னந்தோப்பு புற்று ஆலயத்தில் பிரதோஷ சிறப்பு தீப ஆராதனை பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.