பதிவு செய்த நாள்
30
ஜன
2014
11:01
காரியாபட்டி: காரியாபட்டி சோலைக்கவுண்டன்பட்டியில், ஒவ்வொரு ஆண்டும் கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி, 4 மாதங்கள் விரதம் இருந்து, திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்று வருகின்றனர். நேற்று முன் தினம், 52வது ஆண்டாக ,முருகனுக்கு மாலை அணிவித்து, விரதம் இருந்து ,பாதயாத்திரை செல்ல சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது. பக்தர்கள் கூறுகையில்,"கடந்த 52 ஆண்டுகளாக , பெண்கள் உட்பட 800க்கு மேற்பட்டவர்கள் மாலை அணிந்து, பாதயாத்திரையாக சென்று ,முருகனை தரிசித்து வருகிறோம். கிராமத்தில் அனைவரும் ஒற்றுமையாக, எந்த பாகுபாடின்றி வாழ்ந்து வருகிறோம், என்றனர்.