சாஸ்திர சம்பிரதாயங்கள் காலத்தின் வேகத்திற்குத் தாக்கு பிடிக்குமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2014 03:01
சாஸ்திர சம்பிரதாயங்கள் எப்போது தோன்றின என்று அறுதியிட முடியாத பழமையானவை. என்றும் நிலையான கடவுளைப் போல என்றைக்கும் அவை இருக்கும். மாணிக்கவாசகர் திருவெம்பாவையில், முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே! பின்னைப் புதுமைக்கும் பெயர்த்தும் அப்பெற்றியனே! என அருளியுள்ளார். பழமையில் இருந்து வந்தது தான் புதுமை. புறாவின் காலில் ஓலை கட்டி தூது அனுப்பியதன் வளர்ச்சி கடிதம், இமெயில் என காலப்போக்கில் பரிணாமம் பெற்றது. இன்னும் காலத்தின் வேகத்தில் எத்தனை புதுமை ஏற்பட்டாலும், சாஸ்திர சம்பிரதாயங்கள் ஈடு கொடுத்துக் கொண்டு நமக்கு உறுதுணை செய்யும் என்பதை புரிந்து கொண்டு நம்பிக்கை யுடன் அடுத்த தலைமுறையை நெறிப்படுத்துவோம்.