மதுரை: மதுரை அயிலாங்குடி லட்சுமிவராகர் கோயிலில் பிப்.,??ல் வருஷாபிஷேகம் நடக்கிறது.விழாவில், காலை 7. 15க்கு ஹோமம், பூர்ணாஹூதி நடக்கிறது. நெரூர் வித்யா சங்கர சரஸ்வதி சுவாமி தலைமையேற்று, ஆசியுரை வழங்குகிறார். பகல் 12. 00 க்கு, லட்சுமி வராகப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம், அபிஷேகம், அர்ச்சனை, சாற்றுமுறை நடக்கிறது. பெங்களூரு நித்யா கிருஷ்ணன் குழுவினர் இன்னிசை வழங்குகின்றனர். வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு, பிப்.,9 ல் காலை 10.00க்கு கல்லூரி மாணவர்களுக்கு பாட்டு போட்டி நடக்கிறது. இத்தகவலை கோயில் மேனேஜிங் டிரஸ்டி என்.சேஷாத்ரி தெரிவித்தார்.