ஜம்மு: ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானவர்கள் புனித தலமான அமர்நாத் சென்று, வருகின்றனர். இந்த ஆண்டு, வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு சிறப்பு முன்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமர்நாத் கோவில் தலைமை நிர்வாக அதிகாரி நவீன் சவுத்ரி கூறுகையில், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் சுலபமாக தரிசனம் செய்வதற்காக இந்த சிறப்பு முன்பதிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 28ம் தேதி முதல் இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை துவங்குகிறது, என்றார்.