பதிவு செய்த நாள்
03
பிப்
2014
11:02
ராமேஸ்வரம்: தேவார பாடல் பெற்ற திருத்தல, பாத யாத்திரை குழுவினர், நேற்று, ராமேஸ்வரத்தில் இருந்து, ஆந்திரா, காளஹஸ்தி கோவிலுக்கு, பாத யாத்திரையாக சென்றனர். பாத யாத்திரை குழு தலைவர், சேது தலைமையில், 13 பக்தர்கள், நேற்று, காரைக்குடியில் இருந்து, ராமேஸ்வரம் வந்தனர். ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் முடித்து, பாத யாத்திரையை துவக்கினர். தமிழகத்திலுள்ள முக்கிய கோவில்களில் தரிசனம் செய்து, 4,000 கி.மீ., பயணித்து, ஜூன் 29ல், காளஹஸ்தி கோவிலுக்கு சென்றடைவர். பாத யாத்திரை குழுவை, ராமேஸ்வரம் பக்தர்கள், இந்து அமைப்பினர் வழியனுப்பி வைத்தனர்.