தாராபுரம்: பெரியநாயகி உடனமர் திருவலஞ்சுழி நாதர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், பழனி ஆதீனம் சாது சண்முக அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுரு அடிகளார், பேரூர் ஆதினம் இளைய பட்டம் மருதாசல அடிகளார் ஆகியோர் தலைமையில் கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.