பதிவு செய்த நாள்
05
பிப்
2014
10:02
டேராடூன்: கடந்த ஆண்டு, ஜூன் மாதம் கடும் பேரழிவை சந்தித்த, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள, பத்ரிநாத் விஷ்ணு கோவில், மே, 5 முதல், மீண்டும் திறக்கப்படும் என, பத்ரிநாத் - கேதார்நாத் கோவில் அறக்கட்டளை தெரிவித்து உள்ளது. உத்தரகண்ட் மாநிலத் தில், அலக்நந்தா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, பத்ரிநாத் கோவில். கடந்த ஆண்டு இயற்கை சீற்றத்தின் போது, கேதார்நாத் சிவன் கோவில் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனினும், பத்ரிநாத் கோவில், பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. நவம்பர் மாதம் சாத்தப்பட்ட கோவில் நடை, மீண்டும், வரும் மே மாதம் திறக்கப்படும் என, நேற்று அறிவிக்கப்பட்டது.