கிருமாம்பாக்கம்: நோணாங்குப்பம் திரி சூலி அம்மன் கோவிலில், கோ பூஜை விழா நேற்று நடந்தது. அதனையொட்டி, நேற்று காலை 8:00 மணிக்கு கோ பூஜை, 9:00 மணிக்கு 108 சுமங்கலி பூஜை, 9:30 மணிக்கு 21 சாதுக்களுக்கு மகேஸ்வர பூஜை, 10:00 மணிக்கு 203 வது பஞ்சமி வேள்வி, 11 மணிக்கு சித்தர்களின் சொற்பொழிவு நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சந்திரகேச செய்திருந்தார்.