சின்னபாவடி பத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் விழா ஏராளமான பக்தர்கள் தீமிதித்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2014 12:02
ஈரோடு கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான குண்டம் விழா கடந்த 3-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து கணபதி ஹோமம் நடைபெற்றது.கடந்த 4, 5 மற்றும் 6-ந் தேதிகளில் ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று, தீர்த்தம் எடுத்து வந்தனர். தொடர்ந்து அக்னி கவாளம் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு குண்டம் பற்றவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கோவிலின் முன் அமைக்கப்பட்ட குண்டத்தில் விறகுகள்(கரும்பு) வைக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு குண்டம் பற்றவைக்கப்பட்டது.தீ மிதித்தனர்இந்த குண்டம் நேற்று காலை 7 மணியளவில் தயாரானது. இதைத்தொடர்ந்து கோவிலின் பூசாரிகள் குண்டத்துக்கு பூஜை செய்து தீ மிதித்தனர். அதைத்தொடர்ந்து குண்டம் இறங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்து நின்ற ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் மற்றும் சிறுவர்-சிறுமிகள் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி நேர்த்தி கடனை நிறைவேற்றினார்கள். சில பக்தர்கள் வேல்குத்திக்கொண்டும் குண்டம் இறங்கினார்கள். தொடர்ந்து கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, பொங்கல் வைத்து பத்ரகாளியம்மனுக்கு பொங்கல் படைத்து வழிப்பட்டனர். மாலை 6 மணிக்கு மாவிளக்கு பூஜைநடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங் காரத்தில் பத்ரகாளியம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.