திருமலை ஏழுமலையானை தரிசிக்க 14 மணி நேரம் காத்திருப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2014 12:02
திருமலை ஏழுமலையானை தரிசிக்க, தர்ம தரிசனத்தில், பக்தர்கள் வெüக்ஷீளிக்கிழமை 14 மணிநேரமும், நடைபாதை பக்தர்கள் தரிசனத்துக்கு 7 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசன பக்தர்கள் 4 மணிநேரமும் ஏழுமலையானை தரிசிக்க காத்திருந்தனர். வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிமுதல் மாலை 6 மணி வரை, 35437 பக்தர்களும், வியாழக்கிழமை முழுவதும் 55 ஆயிரம் பக்தர்களும், ஏழுமலையானை தரிசித்தனர். வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, தர்ம தரிசன பக்தர்கள் 28 காத்திருப்பு அறைகளிலும் நடைபாதை பக்தர்கள் 7 காத்திருப்பு அறைகளிலும், ரூ.300 விரைவு தரிசன பக்தர்கள் 4 காத்திருப்பு அறைகளிலும் ஏழுமலையானை தரிசிக்க காத்திருந்தனர்.