பதிவு செய்த நாள்
08
பிப்
2014
12:02
திருவையாறு அருகே உள்ள கார்கோடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் திங்கட்கிழமை நடைபெறுகிறது.கார்கோடேஸ்வரர் கோவில்திருவையாறை அடுத்த காமரசவல்லி என்ற இடத்தில் பிரசித்திப் பெற்ற கார்கோடேஸ்வரர் கோவில் உள்ளது. கடக ராசி பரிகார தலமாக விளங்கும் இக்கோவிலில் சிவபெருமான் மன்மதனை உயிர்ப்பித்து ரதிதேவிக்கு மாங்கல்ய வரம் கொடுத்ததாக தலபுராணம் கூறுகிறது. மேலும் கார்கோடன் என்ற சர்ப்பத்தின் வேண்டுகோளுக்கிணங்க பாம்பு வம்சத்தை இறைவன் உயிர்ப்பித்து கொடுத்ததால் இக்கோவில் கால சர்பதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு கார்கோடேஸ்வரர், ஸ்ரீ தேவி, பூதேவி, வரதராஜர், விநாயகர், காளியம்மன், மாரியம்மன், திரவுபதி அம்மன், செல்லி அம்மன், கருப்புசாமி, செங்கமல ஆண்டவர் ஆகிய கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன. திருப்பணிகள் நிறைவடைந்து ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு விநாயகர், காளியம்மன், மாரியம்மன், செல்லி அம்மன், திரவுபதி அம்மன், செங்கமல ஆண்டவர் கருப்புசாமி, கூட காத்த ஐயனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 8.45 மணிக்கு வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 10-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10.15 மணிக்கு பாலாம்பிகா கார்கோடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 12 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும். தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது.
யாக கால பூஜைவிழாவையொட்டி யாக பூஜைகள் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் ஆதினகர்த்தர்கள், மடாதிபதிகள் கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் புகழேந்திரன், உதவி ஆணையர் கோதண்டராமன், செயல் அலுவலர் மணி, சென்னை மகாலட்சுமி சுப்பிரமணியன், காமரசவல்லி கிராம மக்கள் மற்றும் கார்கோடேஸ்வரர் கைங்கர்ய சபை உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.