திருவாரூர் மாவட்டம் ஸ்ரீவாஞ்சியத்தில் பிப். 11-ல் சதுர்வேத பாராயணம் தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2014 12:02
திருவெண்காடு சுப்ரமணிய கனபாடிகள் வேதபாராயண அறக்கட்டளை சார்பில் பல்வேறு புண்ணிய தலங்களில் ஆண்டுதோறும் சதுர்வேத பாராயணம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, நிகழாண்டில் ஸ்ரீவாஞ்சியத்தில் உள்ள ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி திருக்கோவிலில் 76வது ஆண்டு சதுர்வேத பாராயணம் நடைபெற உள்ளது. இதில் கிரம பாராயணம், மஹாருத்ர யக்ஞம், சிறப்பு ஹோமங்கள், ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பீடாரோகன மஹோத்சவம் மற்றும் 79வது ஜயந்தியை முன்னிட்டு மன்யூ சூக்த ஜபம், ருக்வேத பவமான ஹோமம் கூடிய மஹோத்சவம் நடைபெற உள்ளது.இந்த சதுர்வேத பாராயண நிகழ்ச்சியாக தினந்தோறும் காலை 7மணி முதல் 11.30 மணி வரை விக்னேஸ்வரபூஜை, மஹாருத்ர சங்கல்பம், பூஜைகள், ருத்ர ஜபம், விஷேச அபிஷேகங்களும், அதை தொடர்ந்து சமாராதனையும் நடைபெறும்.சிறப்பு நிகழ்ச்சியாக பிப்ரவரி 11 ஆம் தேதி இரவு 9 மணி முதல் 11 மணி வரை விட்டல்தாஸ் மஹாராஜ் பங்கேற்கும் நாம சங்கீர்த்தனை நடைபெறும்.21 ஆம் தேதி மஹாருத்ரம் மற்றும் ருக்வேத ஹோமம் நிறைவடைய உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் திருவெண்காடு சுப்பிரமணிய கனபாடிகள் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சந்திரன் தலைமையில் நடைபெற்று வருகின்றன.