வளர்பிறை அஷ்டமியையொட்டி சீர்காழியில் அஷ்டபைரவர் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2014 12:02
வளர்பிறை அஷ்டமியையொட்டி, சீர்காழியில் அஷ்டபைரவர்களுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான, பிரம்மபுரீஸ்வரர் உடனாய திருநிலையநாயகி அம்மன் அருள்பாலிக்கும் சட்டநாதர் கோயில் சீர்காழியில் உள்ளது. இந்தக் கோயிலில் காசிக்கு அடுத்தபடியாக அஷ்டபைரவர்களுக்கு தனி சன்னதி உள்ளது.இங்கு மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். தைமாத வளர்பிறை அஷ்டமியையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.சிறப்பு ஹோமங்களும், அதைத் தொடர்ந்து, அஷ்ட பைரவர்களுக்கு 21 வகையான திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.