பதிவு செய்த நாள்
11
பிப்
2014
10:02
காஞ்சிபுரம்: காமாட்சியம்மன் கோவிலில், மோகினி அவதார பல்லக்கு உற்சவம் நடந்தது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 6ம் தேதி முதல் துவங்கி, காலை மற்றும் மாலை பல்வேறு உற்சவங்கள் நடந்து வருகிறது. இதில், 5ம் நாள் உற்சவமான நேற்று காலை 7:30 மணிக்கு உற்சவர் காமாட்சியம்மன், மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், மாலை நாகவாகன உற்சவம் நடந்தது. இன்று காலை 7:30 மணிக்கு சப்பரம் மற்றும் மாலை 7:30 மணிக்கு பிரபல உற்சவமான கிளி வாகன உற்சவமும் நடைபெற உள்ளது. முன்னதாக,மோகினி அவதார உற்சவத்தின் போது, மண்டகப்படி செய்வதற்காக வடக்குமாட வீதியில் புதிய மண்டபம் கட்டப்பட்டு வந்தது. இதன் பணிகள் முடிந்து நேற்று திறப்பு விழா நடந்தது. இதில், மோகினி அவதார காமாட்சியம்மன் எழுந்தருளினார். இங்கு, சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் சுவாமி தரிசனம் செய்தார்.