கும்பகோணம்: காசிவிஸ்வநாத சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மகாமக குளத்தின் வடகரையில் அமைந்துள்ள இக்கோவிலில் கடந்த 2011-ம் ஆண்டு கும்பாபிஷேக திருப்பணிக்காக பாலாலயம் தொடங்கியது. தொடர்ந்து இந்தக் கோவில் சுமார் ரூ. 25 லட்சத்தில் கணபதி விமானம், சுப்பிரமணியர் விமானம், மூலவர் விமானம், அம்பாள் விமானம், நடராஜர் விமானம் உள்ளிட்ட 14 விமானங்கள் திருப்பணி செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.