சுசீந்திரம்: இரவிபுதூர் இடகரை புலமாடசாமி கோயிலில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் ரூ. 40 லட்சம் செலவில் திருப்பணிகள் நடைபெற்றன. இதையடுத்து கும்பாபிஷேக விழா கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. காலை 8-க்கு யாகசாலையில் இருந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கும்பங்களில் மேளதாளங்கள் முழுங்க எடுத்துவரப்பட்டு, முதலில் விமானம் மற்றும் மூலஸ்தானத்தில் சிவாச்சாரியர்களால் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.