தேன்கனிக்கோட்டை: வேணுகோபால சுவாமி கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள், பூர்ணஹுதி, கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, திங்கள்கிழமை காலை தீர்த்தக் குடங்கள் புறப்பாடும் கும்பாபிஷேகமும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.