திருநெல்வேலி: சேரன்மகாதேவி சாலையில் உள்ள திருஞானசம்பந்த மூர்த்தி கோயிலில் வருஷாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலையில் விக்னேஸ்வர பூஜை, கும்பபூஜையும் பின்பு திருஞானசம்பந்தமூர்த்தி, காந்திமதி உடனுறை நெல்லையப்பர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு வருஷாபிஷேகமும் நடைபெற்றது.