அந்நியப்படையெடுப்பின் போது, விஜயநகர மன்னர்கள் தங்களின் வழிபாட்டில் இருந்த ஒரு மாரியம்மன் சிலையை, பாதுகாப்பு கருதி, பணியாட்கள் மூலம் பல்லக்கில் வைத்து அனுப்பி வைத்தனர். வேப்பமரம் நிறைந்த காட்டுப்பகுதியானகண்ணனூரில் பணியாட்கள் பல்லக்கை கீழே வைத்தனர். அங்குஇருந்து அம்மனை அசைக்க முடியவில்லை. அந்த இடத்தில் கோயில் கட்டி, அந்த விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தார் மன்னர் விஜயரங்க சொக்கநாதர். கண்ணனூர் என்னும் அந்தப் பகுதியே பிற்காலத்தில் சமயபுரமானது. இந்த அம்மனுக்கு அண்ணனாக ரங்கநாதரும், அக்காவாக திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியும் கருதப்படுகின்றனர். உடன் பிறப்புகளிடம் இருந்து ஆண்டுதோறும் சீர்வரிசை தங்கை மாரியம்மனுக்கு வருகிறது.