நாகையில் சுனாமி நிவாரண அமைப்பு மூலம் கட்டப்பட்ட குடியிருப்பில் அமைந்துள்ள ஷிர்டி சாய்பாபா கோயில். அமரபூபதி என்பவர் நாகையில் வசிக்கும் சாய் பக்தர். சாயியின் கட்டளைப்படி ஒவ்வொரு பவுர்ணமியன்றும் நாகை காயாரோகண சுவாமி கோயிலில் அவர் பூஜை செய்து வந்தார். 50-வது மாத பூஜையின் போது அவர் கனவில் சாய்நாதர் தோன்றி ஒரு கோயில் கட்டுமாறு பணித்தார். அதன்படியே அமைந்த கோயில் இது. 2010-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 3000க்கும் மேற்பட்ட மக்கள் வாரம்தோறும் இங்கு வந்து சாய்பாபாவை பூஜை செய்து வணங்கி வருகிறார்கள். நாகையில் முதன்முதலாகக் கட்டப்பட்ட சாயி கோயில் இது.