அர்த்தநாரீஸ்வர வடிவம் என்பது சிவனுக்கு இடப்புறத்தில் பார்வதிதேவி பாதிவடிவம் கொண்டிருப்பதாகும். ஆனால், வலப்புறத்தில் தேவியைக் கொண்ட அர்த்த நாரீஸ்வர வடிவத்தை தரிசிக்க வேண்டுமா? இதனை, பார்வதி சிவனை மணம் முடித்த போது இருந்த கோலம் என்கிறார்கள். (திருமணத்தின் போது மாப்பிள்ளையின் வலப்புறத்தில் பெண் இருப்பது வழக்கம்). இத்தலம் தஞ்சை மாவட்டம், கண்டியூர் அருகிலுள்ள திருவேதிக்குடியில் உள்ளது. கன்னிப்பெண்கள் இங்கு வேண்டிக்கொண்டால் திருமணதோஷம் தீருவதாக நம்பிக்கை. பிரம்மன் இத்தலத்து அர்த்தநாரீஸ்வரரை வணங்கி வேதம் ஓதியதால், திருவேதிக்குடி எனப்படுகிறது. இங்கு விநாயகர் வேதங்களை செவிசாய்த்து கேட்கும்படியாக, இடக்காலை மேலே தூக்கி தனிச்சன்னதியில் இருக்கிறார்.