திருவண்ணாமலை: செய்யாறு வேதபுரீஸ்வர் கோவில் பிரம்மோற்சவம் விழாவின், நிறைவு நாளான நேற்று முன்தினம் ஸ்ரீராவணேஸ்வரர் வாகனத்தில் வீதி உலா வந்தார். செய்யாறு ஸ்ரீபாலகுஜாம்பிகை சமேத ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோவிலில், கடந்த ஜனவரி, 31ம் தேதி கொடியேற்றதுடன், பத்து நாள் பிரம்மோற்சவ விழா துவங்கியது. இதனையொட்டி, பல்வேறு வாகனங்களில் ஸ்வாமி வீதி உலா நடந்தது. பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று முன்தினம், பகலில் நடராஜர் உற்சவமும், மாலையில், தீர்த்தவாரி நடந்தது, இரவு கொடி இறக்கப்பட்டு, 11 மணி அளவில் ஸ்ரீராவனேஸ்வரர் திருக்கயிலை சேவை பஞ்சமூர்த்திகள் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.