காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2014 10:02
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவில் பிரமோற்சவ விழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது. காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலின் பிரமோற்சவ விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரமோற்சவ நாட்களில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகிறது. தினந்தோறும் பெருமாள் கருட வாகனம், அனுமந்த் வாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா நடந்து வருகிறது. கடந்த 10ம் தேதி சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு திருக்கல்யாணம் நடந்தது. அதைத்தொடர்ந்து வெண்ணைத்தாழி உற்சவமும் நடந்தது. நேற்று தேர் திருவிழா நடந்தது. தேரில் உலா வந்த நித்ய கல்யாண பெருமாளுக்கு சந்திர தீர்த்ததில் தீர்த்தவாரி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.