ராஜபாளையம்: ராஜபாளையம் மாதாங்கோயில் தெரு அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகவிழா, பிப்ரவரி 9ல் விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து பூஜைகள், தீபாராதனை நடந்தன. நேற்று காலை 9.30 மணிக்கு, கும்பாபிஷேகம் நடந்தது. பின், பக்தர்கள் மேல் புனிதநீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தன. கும்பாபிஷேகத்தை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் 2வது நிர்வாக ஸ்தானீதம் கற்பூர பட்டர் என்ற ஆனந்த் பட்டர் தலைமையில் ஆச்சாரியார்கள் நடத்தினர். ஏற்பாடுகளை, கோயில் நிர்வாக குழுவினர் செய்தனர்.