பதிவு செய்த நாள்
13
பிப்
2014
11:02
மங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டை அடுத்த தொட்டிக்குப்பத்தில் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 10ம் தேதி கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, முதல்கால யாகசாலை பூஜை துவங்கியது. 11ம் தேதி காலை விசேஷ சாந்தி, இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜையும், தீபாராதனையும் நடந்தது. நேற்று (12ம் தேதி) அதிகாலை 5:30 மணிக்கு கோபூஜை, நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தது. 10:00 மணிக்கு கடம் புறப்பாடும், அதனைத் தொடர்ந்து கற்பக விநாயகர், மாரியம்மன், திரவுபதி அம்மன், காத்தவராயன், சுப்ரமணியர், நவக்கிரகம் மற்றும் மன்மதன் கோவில் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர்களுக்கு கும்பாபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். கம்மாபுரம் கம்மாபுரம் அடுத்த கோ.ஆதனூர் ஞான விநாயகர் கோவிலில், கும்பாபிஷேகத்தையொட்டி, காலை 7:00 மணிக்கு யாகசாலை பூஜை, தீபாராதனையும் தொடர்ந்து 10:00 மணிக்கு கடம் புறப்பாடு நிகழ்ச்சியுடன் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.