திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூரில் சுவாமி சிலைகள் கரிக்கோலம் விடும் நிகழ்ச்சி நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் கள்ளுக்கடை மூலை அருகில் பழமையான தீப்பாஞ்சாள் கோவில் உள்ளது. சாலையோரம் அமைந்திருந்ததால் விபத்து அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து ஊர்மக்கள் மற்றும் நன்கொடையாளர்களின் பங்களிப்புடன் மாற்று இடத்தில் புதிய கோவில் கட்டப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு தீப்பாஞ்சாள் அம்மன் உற்சவர் சிலை, கருங்கற்களால் ஆன விநாயகர், முருகன் மற்றும் கோபுர கலசம் ஆகியவை கரிக்கோலம் வந்தன. ஊரிலுள்ள பல்வேறு தெருக்களின் வழியே சென்ற சுவாமிகளுக்கு பக்தர்கள் பூஜைகள் செய்தனர்.