மேட்டூர்: மேட்டூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் பாலதண்டாயுதபாணி கோவிலில் முதன்முறையாக, 63 நாயன்மார் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்காக நேற்று 63 நாயன்மார்கள் சிலையை பக்தர்கள் வாகனத்தில் வைத்து, மேட்டூர் வீதிகளில் ஊர்வலமாக எடுத்து சென்றனர். சிலைகள் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.