பரமத்தி வேலூர்: பொத்தனூர் பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 10-ஆம் தேதி யாக சாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நான்காம் கால யாக சாலை பூஜை நேற்று அதிகாலை தொடங்கி. யாத்ரா தானம், கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து காலை 6.30 மணிக்கு ஆனந்த விநாயகர், மகா பகவதியம்மன், துர்க்கையம்மன் சன்னதி விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.