திருவாரூர்: நீடாமங்கலம் யமுனாம்பாள்கோவிலில் நேற்று பவுனர்மியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு அன்னாதானம் மற்றும் விளமல் பதஞ்சலி மனோகர்சிவன் கோவிலில் மாசி முதல் வெள்ளி ராகுகால பூஜையும் நடந்தது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் வரலாற்று சிறப்பு மிக்க யமுனாம் பாள்கோவில் உள்ளது. இக்கோவிலில் மாதம் தோறும் பவுனர்னமி மற்றும் பஞ்சமியில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. நேற்று நடந்த பவுனர்மியில் சிறப்பு வழிபாட்டைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங் கப்பட்டது. இதில் சுற்றுப்பகுதியில் இருந்து ஏராளமான பங்கேற்றனர். திருவாரூர் விளமளலில் உள்ள பதஞ்சலி மனோகரர் கோவிலில் நேற்று காலை மாசி முதல் வெள்ளியை முன்னிட்டு நடந்த ராகுகால பூஜையில் திருமணத்தடை மற்றும் புத்திரபாக்கியம் வேண்டி நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.