கோத்தகிரி: கோத்தகிரி பில்லிக்கம்பை அரங்கநாதர் கோவிலில் தேர்திருவிழா துவங்கியது. இன்று (15ம் தேதி) காலை 7:00 மணிமுதல் 9:00 மணிவரை ஐயனுக்கு அபிஷேக ஆராதனையும், காலை 10:30 மணிமுதல் 11:30 மணிவரை ஐயனை அலங்கரித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, 2:00 மணிவரை ஐயனின் திருவீதி உலாவும், பகல் 2:00 மணிமுதல் 3:00 மணிவரை ஆடல், பாடல் மற்றும் அரக்கோல் சுற்றுவிளையாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 16ம் தேதி, மறுபூஜை மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.