பரமத்தி அருகே கிராம மக்கள் நன்மைக்காக நேற்று நடைபெற்ற 108 வலம்புரி சங்காபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இக்கோயில்களில் கடந்த 2-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் நன்மைக்காக 108 வலம்புரி சங்கு அபிஷேகம் நடைபெற்றது.இதற்காக 108-வலம்புரி சங்குகளில் காவிரி புனித நீர் ஊற்றி அதில் மலர்களை தூவி சங்கு பூஜை ஹோமம், காயத்ரி மூலமந்திரம் ஹோமம், சன்னதி ஹோமம், பூர்ணாஹூதி ஆகிய ஹோமங்கள் நடத்தப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.