அரக்கோணத்தை அடுத்த நெமிலியில் உள்ள ஸ்ரீ ஊஞ்சல் பொன்னியம்மன் கோவில் திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. கோவிலில் காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 7.30 மணிக்கு பூந்தேர், ரசகுண்டு ஆகியவற்றுடன் 108 பேர் வேல் குத்திக்கொண்டு ஊர்வலம் செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. தற்போது ஐந்து அடுக்கு ராஜகோபுரம் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இப்பணி முடிந்தவுடன் குடமுழுக்கு நடைபெறும்.