நித்ய கல்யாணப் பெருமாள் புஷ்ப பல்லக்கில் வீதி உலா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19பிப் 2014 10:02
காரைக்கால் : காரைக்கால் நித்ய கல்யாணப் பெருமாள் கோவில் பிரமோற்சவ விழாவில், புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதி உலா நடந்தது. காரைக்கால் பாரதியார் வீதியில் உள்ள நித்ய கல்யாணப் பெருமாள் கோவிலின் பிரமோற்சவ விழா, கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. 16ம் தேதி தெப்போற்சவம் நடந்தது. நேற்று முன்தினம், நித்ய கல்யாணப் பெருமாள் புஷ்ப பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜன் வீராசாமி மற்றும் நித்யகல்யாணப் பெருமாள் பக்த ஜன சபாவினர் செய்திருந்தனர்.