பதிவு செய்த நாள்
19
பிப்
2014
11:02
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே, 33 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருவள்ளூர் அடுத்த, ஆலத்தூர் மதுரா மேட்டுத்தும்பூர் கிராமத்தில், தனுஷ்கோடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் மற்றும் 33 அடி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில், கும்பாபிஷேம், நேற்று முன்தினம் நடந்தது. கும்பாபிஷேம், கடந்த 14ம் தேதி காலை, 9:00 மணிக்கு மேல் கிராம தேவி தும்ப காளியம்மன் வாடை பொங்கல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. மறுநாள், 15ம் தேதி மாலை, கும்ப ஆலாஹனம், பூர்ணாஹூதியும், 16ம் தேதி காலை, மகராந்தி ஹோமமும் நடந்தது. நேற்று முன்தினம், காலை, கலச புறப்பாடும், அதைத்தொடர்ந்து, மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, ஆஞ்சநேயரை வழிபட்டனர்.