பதிவு செய்த நாள்
19
பிப்
2014
11:02
கூடலூர்: கூடலூர் சக்தி விநாயகர் கோவில் தேர் திருவிழா சிறப்பாக நடந்தது. கூடலூர் சக்தி விநாயகர் கோவில், 28ம் ஆண்டு தேர்திருவிழா கடந்த 12ம் தேதி துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் பூஜைகள் நடந்தன. 17ம் தேதி காலை 6:00 மணிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, பரிவார தெய்வங்களுக்கு உத்திர நட்சத்திர வருஷாபிஷேகம், சிறப்பு கும்பபூஜை, யாகபூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.காலை 9:00 மணிக்கு ரிவார தெய்வங்கள்,கோபுர விமானம், மூலவர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயர் திருமூர்த்தி ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தில் தாரை, தப்பாட்டம், செண்டை மேளம் இசையுடன், கரகாட்டம், காவடியாட்டம், பொய்கால் குதிரையாட்டம், மயிலாட்டம் ஆகிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இடபெற்றிருந்தன.