மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பூஜாரிகளுக்கு பயிற்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20பிப் 2014 11:02
திருப்புவனம்: திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் மாவட்ட அளவிலான கோயில் பூஜாரிகளுக்கு மனித நேயம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கு உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். காரைக்குடி ராமநாதன் மனிதநேயம் குறித்து பயிற்சியளித்தார். கொல்லங்குடி வெட்டுடையார் கோயில் செயல் அலுவலர் இளையராஜா, அறங்காவலர் குழு தலைவர் ராசாங்கம் மற்றும் அறங்காவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.