பெரம்பலூர்: பெரம்பலூர் ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரியில் அன்னை சாரதா தேவி ஜெயந்தி விழா மற்றும் கல்லூரியின் 16வது ஆண்டு விழா நடந்தது. விழாவுக்கு ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்து பேசினார். விழாவில், நடிகர் ஸ்ரீகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கலை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். கல்லூரி முதல்வர் ராஜசேகரன் ஆண்டறிக்கை வாசித்தார். தமிழ் துறை தலைவி பேராசிரியை செந்தமிழ்ச்செல்வி அறிமுக உரையாற்றினார். தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் செயலாளர் விவேகானந்தன் வரவேற்றார். வணிகவியல் துறை தலைவி பேராசிரியை கவிதா நன்றி கூறினார்.