அவலூர்பேட்டை: செவலபுரையில் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. மேல்மலையனூர் ஒன்றியம் செவலபுரை கிராமத்தின் எல்லைப்பகுதியில் சங்கராபரணி ஆறு கல்லாற்றங்கரை உள்ளது. இதன் அருகில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதை முன்னிட்டு 19 ம் தேதி காலையில் கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. அனைத்து ஹோம பூஜைகளும் நடந்தன. நேற்று காலை 11.30 மணிக்கு நவகலச அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை பரசுராமன், சந்திரசேகரன், பொன்னுரங்கன் செய்திருந்தனர்.