கரூர்: ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி ஸ்வாமிகள் திருக்கோவிலில், நவதீர்த்த அபிஷேக விழா நேற்று நடந்தது. கரூர் தீயணைப்பு வளாகத்தில் உள்ள ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி ஸ்வாமி கோவிலில் உள்ள மூலவர் சிலைக்கு ஒன்பது நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் மூலம் மஹா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பார்த்தசாரதி பாலாஜி, சந்தோஷ் சுப்பிரமணிய குருக்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். மஹா தீபாராதனைக்குப் பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியநாராயணன், நிலைய அலுவலர் தியாக ராஜன், தாசில்தார் ராஜகோபால், கமிட்டி தலைவர் கந்தசாமி, செயலாளர் சண்முகம், பொருளாளர் பாஸ்கரன் உட்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.