ராமேஸ்வரம் கோயிலில் நாளை (சனிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு ஸ்படிகலிங்க பூஜைகளும் அதனை தொடர்ந்து காலை நேர பூஜைகளும் நடைபெறும். பின்னர் 6.30 மணிக்கு கோயிலிலிருந்து ராமநாதசுவாமி புறப்பாடாகி கெந்தமான பர்வதம் மண்டகப்படிக்கு சென்றவுடன் கோயில் நடைகள் சாத்தப்பட்டு சுவாமிகள் கோயிலுக்கு வந்தவுடன் நடைகள் மீண்டும் திறக்கப்படும்.