பதிவு செய்த நாள்
22
பிப்
2014
05:02
ராமேஸ்வரம்: மாசி மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, ராமேஸ்வரம் கோயிலில் இருந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் கெந்தமாதன பர்வதம் மண்டபடிக்கு புறப்பாடானவுடன், கோயில் நடை சாத்தப்பட்டது. மாசி திருவிழா 3ம் நாளில் காலை 4 மணிக்கு, ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் தங்க கேடயத்தில் எழுந்தருளி, நான்கு ரதவீதிகளில் உலா வந்தனர். காலை 6 மணிக்கு சுவாமி வெள்ளி பூத வாகனம், அம்மன் வெள்ளி கிளி வாகனத்தில் எழுந்தருளி, பஞ்சமூர்த்திகளுடன் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் எழுந்தருளினர். சுவாமி புறப்பாடானவுடன் கோயில் நடை சாத்தப்பட்டது. பின்னர் மண்டகப்படியில் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாரதனை நடந்ததும், அங்கிருந்து சுவாமி, அம்மன் புறப்பாடாகி இரவு கோயிலுக்கு வந்ததும், கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டு, அர்த்தசாம பூஜை முடிந்தவுடன், மீண்டும் கோயில் நடை சாத்தப்படும்.