தேனி: தேனி வேதபுரீயில் உள்ள சுவாமி சித்பவாநந்த ஆச்ரமம், ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தஷிணாமூர்த்தி வித்யாபீடத்தில் பிப்., 25, 26ம் தேதிகளில், காலை முதல் மாலை வரை, மழை வேண்டி கூட்டுப்பிரார்த்தனை நடக்கிறது. இதில் பங்கு கொண்டு பிரார்த்தனை செய்ய அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த வருண ஜப வேள்விக்கு, பொருளுதவி செய்பவர்களும் செய்யலாம், என ஆசிரம நிர்வாகம் தெரிவித்துள்ளது.