பதிவு செய்த நாள்
25
பிப்
2014
10:02
நாமக்கல்: கடந்தப்பட்டி ஆதிசிவனார் கோவிலில், ஃபிப்ரவரி, 27ம் தேதி, மகா சிவராத்திரி விழா, கோலாகலமாக நடக்கிறது. நாமக்கல் அடுத்த கடந்தப்பட்டியில், முதல் உலகத்து ஆதிசிவனார் உடனுறை ஆதர்வன வேத மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் மகா சிவராத்தி விழா, கோலாகலமாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு விழா, ஃபிப்ரவரி, 27ம் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு, அன்று இரவு, இந்து வேத முறைப்படி, தமிழில் சிறப்பு யாக பூஜையும், ஃபிப்ரவரி, 28ம் தேதி அதிகாலை, 5 மணிக்கு, 15ம் ஆண்டு விழா பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து, ஸ்வாமிக்கு அபிஷேகமும், ஆராதனை நடக்கிறது. சிறப்பு அலங்காரத்தில், ஸ்வாமி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.
* வியாஸ பீடம், ரகுநாத் சமஸ்தானம் மற்றும் ஜெய் குரூப்ஸ் சார்பில், ஃபிப்ரவரி, 27ம் தேதி மகா சிவராத்திரி விழா, ப.வேலூர் மைனர் வீரப்பப்பிள்ளை சம்பூரணம்மாள் திருமண மண்டபத்தில் நடக்கிறது. காலை, 9 மணிக்கு, கோ, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம் நடக்கிறது. காலை, 11 மணிக்கு ருத்ர யாகம் துவக்கம், தீபாராதனை, மாலை, 3 மணிக்கு 108 கலசபூஜை துவக்கம், இரவு, 9 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. ஃபிப்ரவரி, 28ம் தேதி காலை, 6 மணிக்கு, பூர்ணாகுதி, 108 கலச தீர்த்த அபிஷேகம், ஸ்வாமிக்கு சிறப்பு அலங்காரம், பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதை தொடர்ந்து, காலை, 8 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.