கோவை கோணியம்மன் தேரோட்ட விழா: கொடியேற்றத்துடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2014 10:02
கோவை: கோவை மாநகரின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும், திருவிளக்கு வழிபாட்டுடன் தேர்திருவிழா நடக்கிறது. கோணியம்மன் கோவில் தேரோட்டம் வரும் மார்ச் மாதம் 5ம் தேதி நடைபெறுவதையொட்டி நேற்று கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் அக்னி கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி ஏராளமான பெண்கள் வழிபட்டனர். தொடர்ந்து மார்ச் 10ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வரும் 4ம் தேதி திருக்கல்யாணமும், 5ம் தேதி அம்மன் திருத்தேரில் அமர்தல் மற்றும் தேர்வடம் பிடித்தலும் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினரும், கோவில் செயல் அலுவலர் விமலா, உதவி ஆணையர் ஜீவானந்தம் ஏற்பாடு செய்து வருகின்றனர்.