பதிவு செய்த நாள்
26
பிப்
2014
11:02
புதுச்சேரி: நிமிலீஸ்வரர் கோவிலில் நடக்கும் சிவராத்திரி விழாவில், நான்குகால பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வில்லியனூர் அடுத்த கூடப்பாக்கத்தில் நீலோத்பவாம்பிகை சமேத நிமி லீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, சிவராத்திரி விழாவை முன்னிட்டு, நாளை (27ம் தேதி) மாலை நடக்கும் முதல்கால பூஜையில், பஞ்ச கவ்யத்தால் சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது. இரவு, இரண்டாம்கால பூஜையில் தேன், பால், வாழைப்பழம், நெய் மற்றும் சர்க்கரை அடங்கிய ஜயமுதம் அபிஷேகம் நடக்கிறது.மூன்றாம் கால பூஜையின்போது, இரவு தேன் அபிஷேகம் நடக்கிறது. நான்காம் கால பூஜை, நாளை மறு நாள் (28ம் தேதி) அதிகாலை துவங்குகிறது. சுவாமிக்கு கரும்புச் சாறு அபிஷேகம் செய்யப்படுகிறது.விழா ஏற்பாடுகளை, கோவில் சிறப்பு அதிகாரி ஹரிஹர நமோ நாராயணா மற்றும் சிவனடியார் கள், கிராம மக்கள் செய்துள்ளனர்.